tamilnadu

தொலைபேசி வழியே குறைதீர் காணல்: திருப்பூர் ஆட்சியர் தகவல்

திருப்பூர், ஆக. 1- பொது மக்கள் வரும் திங்கள் முதல் தொலைபேசி வாயிலாக தங்களது குறை களைத் தெரிவிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவஅது, திருப்பூரில் பொதுமக்களின் குறைகளைக் களைய திங்கள்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வந்தது.

ஆனால் தற் போதைய கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க திங்கள்தோறும் மாவட்ட ஆட்சியரக வாயிலில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது குறைகளை வரும் திங்கள் முதல் தொலைபேசி மூலம் தெரிவிக்க சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் அநாள் முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்க ளது புகார்களை இதற்கென தொடங்கப் பட்டுள்ள 0421 - 2969999 என்ற தொலை பேசி எண்ணிற்கு காலை 11.00 முதல் மதியம் 1.00 மணி வரை தெரிவிக்கலாம்.

பொது மக்களிடமிருந்து வரப்பெறும் குறைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர் கள் மூலம் நிவர்த்தி செய்திடும் வகையில் விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப டும், இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.