திருப்பூர், ஜூலை 17 - ஜேக்டோ ஜியோ போராட் டத்தில் தலைமை ஏற்றோர் மீது பழி வாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருப்பூர் வடக்கு வட்டக் கிளை 4 ஆவது மாநாடு செவ்வாயன்று திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலு வலக கூட்ட அரங்கில் வட்டக் கிளைத் தலைவர் டி.செல்வராஜ் தலைமை தாங்கினார். வட்டக் கிளை இணைச் செயலாளர் ஜி. வெங்கடேசப் பெருமாள் வர வேற்றார். மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன் துவக்கி வைத்து உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.சண்முகம் வாழ்த்திப் பேசினார். வட்டக் கிளைச் செயலாளர் பி.அம்மாசை, பொருளாளர் ஏ.சண்முகசுந்தரம் ஆகியோர்அறிக்கையை முன் வைத்தனர். இம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ்நாடு முழு சுகாதார திட்ட ஒருங் கிணைப்பாளர்களுக்கு குழுக் காப்பீடு, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை யில் காலிப் பணியிடங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர் களுக்கு முன்னுரிமை அடிப் படையில் வேலை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன் வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஏழாவது ஊதிய மாற் றத்தில் 21 மாத நிலுவைத் தொகை யை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றோர் மீதான பொய் வழக்குகளையும், பழிவாங்கல் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். அரசாணை 56 ஏ பிரிவை ரத்து செய்ய வேண்டும். சாலைப் பணியாளர் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்கால மாக முறைப்படுத்தி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து சங்க தலை வராக மூ.ராமசாமி, துணைத் தலை வர் அ சந்திரசேகர், பி.மகேந்திர பூபதி, வட்டக் கிளை செயலாளர் பி.அம்மாசை, இனைச் செயலாளர் கள் இரா.முத்து தாமஸ், ஏ. சண்முக சுந்தரம், வட்ட கிளைப் பொருளாளர் ஜி.வெங்கடேஷ் பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.பாபு ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். முன்னதாக, மாவட்டப் பொரு ளாளர் மு.சீனிவாசன் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டின் நிறை வாக மாவட்டச் செயலாளர் ஆ.அம் சராஜ் மாநாட்டு நிறைவுரை ஆற்றி னார். வட்டக்கிளைத் துணைத் தலைவர் பி.மகேந்திரபூபதி நன்றி கூறினார்.