திருப்பூர், ஜூன் 12- பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புத னன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தார். பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், பெருந்தொழுவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.64 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டு வரு கிறது. தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம் பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.38.68 லட்சம் மதிப்பில் கொடுவாய் - நாச்சிப்பாளையம் சாலை முதல் ஆண்டிபாளையம் வரை தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கண்டியன்கோவில் ஊராட்சி தாயம்பாளையத்தில் ரூ.5.24 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும், தெற்கு அவி நாசிபாளையம் சாரதா நகரில் தனிநபர் கழிப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முழு மானி யத்துடன் 10 கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், வடமலைபாளையம் ஊராட்சி வேலப்பன் கவுண்டன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.29.60 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. புத்த ரச்சல் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.20 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டப்பட்டு வருகிறது. கோவை நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி யினையும், நாத கவுண்டன்பாளையத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.50.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தார்ச் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பொங்க லூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.161.06 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாகவும் தர மாகவும் முடித்திட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ் குமார், செயற்பொறியாளர் பிரேம்குமார், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் மகேஸ்வரன், மகேந்திரன் உள் ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உட னிருந்தனர்.