நாகர்கோவில், ஏப்.11- கன்னியாகுமரி மாவட் டத்தில் தெற்கு ரயில்வே சார்பில் நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைப்பது குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் செவ் வாயன்று (ஏப்.11) நேரில் பார்வையிட்டார், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், நாகர்கோ வில் முதல் கன்னியாகுமரி வரையிலான ரயில் பாதை யானது ஒற்றை வழியாக இதுநாள்வரை செயல்பட்டு வருகிறது. இப்பாதையினை இரட்டை ரயில் பாதையாக அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை யிலான 8 வருவாய் கிராமங்க ளில் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. பறக்கை, சுசீந்திரம், வடக்குத்தாமரைக்குளம், தெற்கு தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், கொட்டா ரம் கிழக்கு, கொட்டாரம் மேற்கு, கோவளம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவது தொ டர்பாக ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. ஆய்வு அறிக்கை யினை விரைந்து சமர்ப் பித்திட துறை சார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது என தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வில், தென்னக ரயில்வே முதன்மை செயற்பொறியா ளர் நிரஞ்சன் நாயக், துணை செயற்பொறியாளர் பமிலா, தனி வட்டாட்சியர் நிலமெ டுப்பு ரயில்வே அலகு ஒன்று சுபா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.