திருப்பூர், ஜூலை 30 – சென்னையில் உள்ள தமிழ்நாடு யோகா விளை யாட்டு முன்னேற்றக் கழகம், மற்றும் திருப்பூரில் உள்ள அன்பொளி யோகாலயா மற்றும் ஆர்.ஆர்.ரவி யோகா மையம் இணைந்து மாநில அளவிலான யோகா போட்டியை திருப்பூர் பெம் ஸ்கூல் ஆஃப் எக்சலென்ஸ் பள்ளியில் ஞாயிறன்று நடத்தினர். இந்த யோகா போட்டி யில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து முப்பது பள்ளிகளைச் சேர்ந்த 1150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வயது அடிப்படையில் பன்னிரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் பல்வேறு விதமான ஆசனங்களை மாணவ, மாணவிகள் செய்துகாட்டினர். இதில் ஒட்டு மொத்த சாம்பியனாக முதலி டத்தை பெம் ஸ்கூல் ஆஃப் எக்ஸ்லென்ஸ் பள்ளி மாணவ மாணவிகளும், இரண்டாம் இடத்தினை ஜெயந்தி மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளி மாணாக்கர்களும், மூன்றாம் இடத்தினை வெற்றி வித்யாலயா பள்ளி மாணாக்கர்களும் பெற்றனர். பெம் பள்ளி முதல்வர் கெளசல்யா ராஜன், திருப்பூர் மாவட்ட யோகா பெடரேசன் தலைவர் ஆர்.ஆர்.ரவி ஆகியோர் பரிசு வழங்கினர். யோகா ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.