அவிநாசி, பிப். 1- அவிநாசியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத் திருத்தங்கள் கடந்த செப் டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் செவ்வாயன்று ரங்கா நகர், ரவுண்டானா பகுதியில் அவிநாசி போக்குவரத்து காவலர்கள் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேன் ஓட்டுநர் விஜய்ராஜுடம் சோதனை செய்தனர். இதில் மது அருந்தியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து அவிநாசி ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விபிசி வாகன ஓட்டுநர் விஜய்ராஜுக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மதுபோதையில் வாகனம் ஓட்டி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியது அவிநாசி பகுதியில் இதுவே முதல் முறையாகும்.