india

img

ஏடிஎம்மில் பணம் இல்லையெனில் வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்...

புதுதில்லி:
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லையெனில்  வங்கிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த புதிய விதிமுறை அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சமீபத்தில்வெளியிட்ட விதிமுறைகளில் இதுகுறித்து தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையால் வங்கிகள் ஏடிஎம் இயந்திரத்தில் எப்போதும் போதிய பணத்தை நிரப்பி வைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்தில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக பணம் இல்லாத நிலை உருவானால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வங்கி களுக்காக ஏடிஎம்களை நிர் வகிக்கும் பிற நிறுவனங்களின் (வெள்ளை லேபிள் ஏடிஎம்) ஏடிஎம் இயந்திரத்தில் பணம்இல்லாத சூழல் உருவானாலும் எந்த வங்கிக்காக அந்த ஏடிஎம் செயல்படுத்தப்படுகிறதோ அந்த வங்கியிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும்  இந்த அபராதத் தொகையை அந்நிறுவனத்திடம் இருந்து வங்கிகள் பின்னர் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.