tamilnadu

img

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850ஐ வழங்கிடுக சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 15- குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயி ரத்து 850 ரூபாய் வழங்கக்கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தமிழ் நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத் தில் 35 ஆண்டுகள் உழைப்பை அர்ப் பணித்து ஓய்வு பெற்றுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக மாதம் ரூ.2 ஆயிரம் மட்டும் வழங்குவது ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 ஐ வழங்குவதுடன், குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு, இல வச பஸ்பாஸ், ஈமக்கிரைய செலவு நிதி ஆகிய ஓய்வு கால பணப்பலன்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி  தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப் பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.முத்தமிழ் ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.அங் கப்பன் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினார். முன்னாள் மாநில துணை தலைவர் எம்.கருணாநிதி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் பாக்கி யம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஊரக  வளர்ச்சி உள்ளாட்சி துறை சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஞானசேகர் நன்றி கூறி னார். இதன்பின் கையொப்பமிட்ட படி வங்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.