புதுக்கோட்டை, ஜூலை 12 - மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஓய்வு பெற்ற பள்ளி - கல்லூரி ஆசிரி யர் நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகர் திடலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.சரவணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் கா.ஜெயாலன் பேசி னார். ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சுப்பிர மணியன், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் சா.இளங் கோவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் பி.மாரிமுத்து வரவேற்க, பொருளாளர் நா.கிருஷ்ணன் நன்றி கூறினார். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்திட வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதி யத்தை 10 விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும். 3 விழுக்காடு அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். குடும்ப நல நிதியை உடனுக்குடன் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.