tamilnadu

img

கடலூர் வேன் விபத்து - நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்; இருவர் மருத்துவமமையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செம்மங்குப்பம் பகுதி கேட் கீப்பரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.