தலா ரூ. 10 லட்சம் கூடுதல் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
10 பேரை பலிகொண்ட சின்னக்காமன்பட்டி பட்டாசு விபத்து;
சிஐடியு வரவேற்பு
விருதுநகர், ஜூலை 8- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது, சின்னக்காமன்பட்டி. இங்கு கமல்குமார் என்பவருக்கு சொந்தமான கோகலேஸ் பட்டாசு ஆலையில் கடந்த ஜூலை 1 அன்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு பெண் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஆலை நிர்வாகம் தலா ரூ. 10 லட்சம் நிவார ணம் வழங்க வேண்டும் என சிஐடியு - விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் உற்பத்தி யாளர்கள் இணைந்து உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5.50 லட்சத்திற்கு மேல் நிவாரணம் வழங்க முடியாது என பிடிவாதம் காட்டினர். இதனை எதிர்த்து, திருவில்லி புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொழிலாளர்களின் குடும்பத்தினரும் சிஐடியு- பட்டாசு தீப்பெட்டி தொழி லாளர் சங்கமும் முறையீடு செய்தன. இந்த முறையீட்டின் மீது செவ்வாயன்று நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அதில், ஏற்கெனவே ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப் பட்ட ரூ. 5.50 லட்சம் நிவாரணம் போக, கூடுதலாக ரூ. 10 லட்சம் பட்டாசு ஆலை உரிமையாளர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ஆலை நிர்வாகத்தினர் கூடுதல் நிவாரணத் தொகை தலா ரூ. 10 லட்சத்திற் கான வரைவோலையை நீதிமன்றத்தி லேயே வழங்கினர். சிஐடியு வரவேற்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு சிஐடியு - விருதுநகர் மாவட்ட பட்டாசு -தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.என். தேவா, மாவட்டச் செயலாளர் எம்.சி.பாண்டியன், ஆகியோர் கூட் டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இறந்து போன தொழிலாளியின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 15.50 லட்சம் போராட்டத்தின் மூலம் பெற்று தரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அகில இந்திய வழக்கறிஞர் சங்க த்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முனீஸ்வ ரன், தொழிலாளர்களுக்காக சிறப்பான முறையில் நீதிமன்றத்தில் ஆஜராகி முறையீடு செய்துள்ளார். அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அந்த அறிக்கை யில் தெரிவித்துள்ளனர்.