சென்னை;
முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகவிலைப்படி முடக்கத்தை ரத்து செய்யக்கோரி திங்களன்று (ஆக.16) தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை மாவட்டம் சார்பில் ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் கூறியதாவது:திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை இடைக்கால நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க
வில்லை. இது ஏமாற்றத்தை அளிக் கிறது. 1.1.2020 முதல் 30.6.2021 வரை அகவிலைப்படி வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அதிமுக அரசு அறிவித்தது. புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, அகவிலைப் படியை வழங்கும் என்று
எதிர்பார்த்தோம்.
இதற்கு மாறாக, 2022 மார்ச் மாதம் வரை அகவிலைப் படியை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது 27 மாதங்கள் அகவிலைப்படியை முடக்கி உள்ளது. இதை ஓய்வூதியர்கள் மீதான தாக்குதலாக கருதுகிறோம்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியம் உயர்வு, 70 வயதை கடந்தவர்களுக்கு ஓய்வூதியத்தில் 10 சதவீதம் உயர்வு என்பன போன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள், குடும்ப நல நிதியை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்துவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதையும் செய்யவில்லை. இது தொடர்பாக தமிழக அரசு, ஓய்வூதியர் சங்கத்தை அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாவட்டத் தலைவர் பி.ஏபெல் தலைமை தாங்கினார். மாநிலதுணைத்தலைவர் கி.இளமாறன், செயலாளர் ம.நாதன், மாவட்ட பொருளாளர் ம.சந்திரன், சென்னை பெருநகர குடிநீர் வழங் கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஒய்வூதியர் சங்க தலைவர் பரமச் சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.