உடுமலை, ஆக.14- தமிழக அரசின் இலவச மடிக் கணினி வழங்கக்கோரி புதனன்று மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் பகுதியில் மாணவர்கள் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி வழங்கி வருகிறது. ஆனால் 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டு கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட வில்லை. இந்நிலையில், மடத்துக் குளம் உயர்நிலைப் பள்ளியில் கடந்தாண்டுகளில் பிளஸ் 2 பயின்ற மாணவ, மாணவிகள் தமிழக அரசின் இலவச மடிக் கணினி வழங்கப்படவில்லை. இதையடுத்து பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் மடிக்கணினி தங்களுக்கும் வழங்க வேண்டு மென கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் தற்போது வரை இலவச மடிக்கணினி வழங்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த மாணவ, மாணவிகள் புதனன்று திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை யில் சாலை மறியல் பேராட்டத் தில் ஈடுபட்டனர். இதையறிந்த காவல்துறையினர் மற்றும் கல் வித்துறை அதிகாரிகளும் மாண வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை யில் கூடிய விரைவில் மடிக் கணினி வழங்க நடவடிக்கை எடுப் பதாக தெரிவித்தனர். இதைய டுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.
தாராபுரம்
இதேபோல் தாராபுரம் அடுத் துள்ள தளவாய்பட்டிணம் அரசி னர் மேல்நிலைப்பள்ளியில் 2017-18 மற்றும் 2018 - 19 கல்வி யாண்டில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக் கணினி கேட்டு 15 நாட்களுக்கு முன்பு பள்ளியை மாணவர்கள் முற்றுகையிட்டு, மடிக்கணினி வழங்கக்கோரி கோரிக்கை மனு அளித்திருந்தனர். மாவட்ட கல்வி அலுவலரிடம் தகவல் அளித்து பெற்றுத் தருவதாக தலைமை யாசிரியர் பொன்னுச்சாமி உறு தியளித்திருந்தார். இந்நிலையில், இலவச மடிக் கணினி வழங்குமாறு மாணவ, மாணவிகள் தாராபுரம்-உடு மலைசாலை தளவாய்பட்டினத் தில் புதனன்று காலையில் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். சாலை மறியல் காரணமாக தாராபுரம்-உடு மலை மார்க்கத்தில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதை யடுத்து அலங்கியம் காவல் துறையினர், தளவாய்பட்டி னம் அரசினர் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியை உமா தேவி ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரை வில் மடிக்கணினி கிடைக்க கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்கள். இதைய டுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.