புதுச்சேரி, ஜூன் 27- பள்ளிகள் திறந்தும் கிராமப்புற மாணவர்களுக்கு பேருந்து வசதி இல்லாததை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் பள்ளிகள் திறந்தும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச சீருடை வழங்காது, தமிழ் பாடப்புத்தகம் வழங்காதது, கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் பேருந்தை இயக்காதது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் பிரவீன் குமார், பிரதேச குழு நிர்வாகிகள் ஸ்டிபன் ராஜ், வந்தனா, சிபி, அபிஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.