மயிலாடுதுறை, மார்ச்.17- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம், மாதிரி மங்கலத்தில் புதிதாக தொடங் கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி யும், புதிய கட்டிடம் கட்டித்தர வலி யுறுத்தியும் அதுவரையில் மாற்று கட்டிடத்தில் கல்லூரியை இயக்கிட வலியுறுத்தியும் புதனன்று இந்திய மாணவர் சங்க தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. பிறகு வட்டாட்சியர் நேரில் வந்து உறுதியளித்ததின்பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாதிரி மங்க லம் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் நடைபெற்ற போராட் டத்திற்கு மாணவர் சங்கத்தின் குத்தாலம் ஒன்றிய தலைவர் ஆர்.பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் அபி, ரஞ்சித், பிரவீன், மார்டின், மாவட்டத் தலைவர் மணிபாரதி உள்ளிட்டோர் உரையாற்றினர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ விளக்கிப் பேசினார். கல்லூரி நிர்வாகிகள் தீபா, அனுஷ்யா, பிரித்தி, டென்னிசன் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.