tamilnadu

நூறடி ஆழ கிணற்றில் பாய்ந்த கார் ஐந்து பேர் பத்திரமாக மீட்பு

திருப்பூர், ஜூன் 8 – திருப்பூர் மாவட்டஆட்சியரகத்தில் நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு நாடாளு மன்ற உறுப்பினர்களை அழைக்கா ததற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி சனியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட ஆட்சிய ரகத்தில் அனைத்துத்துறை ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர் மற்றும் ஆளும்கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள் ளனர். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு  அனுப்பப்படவில்லை. அவர்களை அழைக் காமல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது ஜன நாயக விரோத நடவடிக்கையாகும். மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி களின் சார்பாக இதை வன்மையாக கண்டிக் கிறோம். திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்ட மன்றத் தொகுதிகளுக்கு திருப்பூர் கே.சுப்ப ராயன், கோவை பி.ஆர்.நடராஜன், நீலகிரி ஆ.ராசா, பொள்ளாச்சி க.சண்முகசுந்தரம், ஈரோடு அ.கணேசமூர்த்தி ஆகிய நாடாளு மன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதி களாக உள்ளனர். எனவே இம்மாவட்டத்திற்கு உட் பட்ட பகுதிகளின் நாடாளுமன்ற உறுப் பினர்களை ஆய்வுக் கூட்டத்திற்கு அழைத்து மக்கள் பிரச்சனைகளை எடுத்து ரைப்பதற்கு வாய்ப்புக்  கொடுக்க வேண்டும்.  அதை மறுப்பது ஜனநாயக விரோதமாகும். அமைச்சரின் தூண்டுதலின்பேரில்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லையோ என்ற சந் தேகம் எழுந்துள்ளது. ஆகவே இது குறித்து வரும் ஜூன் 10ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் நிர் வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இது குறித்து பேசுவது என்று முடிவு  செய்யப்பட்டுள்ளதாக எம்.ரவி கூறி யுள்ளார்.