tamilnadu

img

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் அவலங்கள் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மாதர் சங்கம் புகார்

திருப்பூர், ஆக. 1 – திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினர் நடத்திய ஆய்வில் சுகாதாரமற்ற நிலை, கை யூட்டுப் பெறுவது உள் ளிட்ட பல அவலங்கள் கண்டறியப்பட்டன.  இது குறித்து நடவடிக்கை எடுத்து சீர்கேடுகளைக் களைய வேண்டும் என மாதர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.  ஜனநாயக மாதர் சங்க தெற்கு நகரத் தலைவர் மினி தலைமையில் தெற்கு நகரச் செயலாளர் பானுமதி,  மாவட்டச் செயலாளர் பவித்ரா, மாவட்டத் தலைவர் மைதிலி, மாவட்டப் பொருளாளர் ஷகிலா, தெற்கு ஒன்றியத் தலைவர் லட்சுமி  ஆகியோர்  புதனன்று திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை கண் காணிப்பாளரைச் சந்தித்து மனு அளித் தனர். இம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திருப்பூர் அரசு மருத்துவமனையில் 1 முதல் 12 வயதுள்ள குழந்தைகள் வார்டில் கழிப்பிட அறையில் கதவு இல்லை. ஆண்கள் செல்போன் பேசுவது போல் உள்ளே உட்கார்ந்து கொள்கின்றனர். இதனால் பெண்களுக்குப் பாதுகாப்பு  இல்லை. மேலும் அவர்கள் கழிவறைக்குச்  செல்ல முடிவதில்லை. அதே வார்டில் குழந்தைகள் காய்ச்சல், வாந்தி, பேதியுடனும், சிறுநீர் தொற்று காய்ச்சலுடன் வருகிறார்கள். அங்கு வார்டு  சுத்தம் செய்வதில்லை. அங்கு ஆய்வு செய் ததில் 10 நாட்களாக வார்டு துடைக்கப் படவில்லை என தெரியவந்தது. அதேபோல் பிரசவ வார்டில் ஆண் குழந்தை பிறந்தால் கட்டாயமாக ரூ.500  கையூட்டு வாங்குகிறார்கள். காயங் களுக்குக் கட்டுப்போடும் இடத்தில் கட்டு  கட்டிய பிறகு ரூ.20 தர வேண்டும். இதே போல் வார்டில் டிஸ்சார்ஜ் செய்யும்போது குளுக்கோஸ் போட்ட ஊசியைக் கழற்ற வார்டில் ரூ.50 வாங்குகிறார்கள். விபத்து வார்டில் ஆண்கள் வார்டில் படுக்கை வசதி குறைவாக உள்ளது. இரவு நேரத்தில் விபத்து நடந்து அவசர  சிகிச்சைக்கு வரும்போது பாதிக்கப் பட்டவர்களை தரையில் படுக்க வைக்கும் நிலை உள்ளது.  பிரேத பரிசோதனை செய்யும்போது பேனா, பென்சில், ரப்பர், காகிதம் வாங்கிக் கொண்டு வரும்படி, இறந்தோரின் உறவினர்களிடம் தொந்தரவு  செய்யும் நிலை உள்ளது. எனவே பல ஆயிரக்கணக்கான நோயாளிகள் வரும் நிலையில் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் இருக்கும் சீர்கேடுகளைக் களைந்து, சுகா தாரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் கேட்டுக் கொண் டுள்ளது. முன்னதாக மாதர் சங்கத்தைச் சேர்ந் தோர் தலைமை மருத்துவமனையில் நோயாளியாக உள்ளே தங்கி சிகிச்சை பெற்று அங்கிருந்த நிலைமைகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவு களை கண்காணிப்பாளரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது குறிப் பிடத்தக்கது.