tamilnadu

img

தாலுகா அளவில் நலவாரிய அலுவலகங்களை செயல்படுத்திடுக உடுமலை பொதுத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

உடுமலை, மே 19-தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களை தாலுகா அளவில் செயல்படுத்த வேண்டும் என சிஐடியு உடுமலை பொதுத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சிஐடியு உடுமலை பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 6வது மகாசபை உடுமலையில் ஞாயிறன்று நடைபெற்றது. வெ.ரங்கநாதன் தலைமை வகித்தார். சாமிதுரை கொடியேற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராமலிங்கம் துவக்க உரையாற்றினார். வி.விஸ்வநாதன் வாழ்த்திப் பேசினார். இதில் புதிய கமிட்டியின் தலைவராக வெ.ரங்கநாதன், செயலாளராக எஸ்.ஜெகதீசன், பொருளாளராக ஆர்.ஜோசப், துணை தலைவர்களாக எஸ்.சாமிதுரை, என்.பாபு,துணை செயலாளர்களாக பி.ராஷித்அலி, காஜா மைதீன் உள்ளிட்ட 19 பேர் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.உடுமலை நகரம் முழுவதும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். உடுமலை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். நகர விற்பனைக்குழுவை கூட்ட வேண்டும். அரசு விடுமுறையில் இயங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர் நலன் காக்கவேண்டும். இஎஸ்ஐ மருத்துவமனையை 24 மணி நேர மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.