திருவள்ளூர், ஜூன் 5- திருவள்ளூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சோழவரம் மற்றும் காரனோடை ஆகிய இடங்களில் புதிய கிளைகள் துவக்க விழா புதனன்று (ஜூன் 5) நடைபெற்றது. காரனோடையில் நடைபெற்ற துவக்க விழாவில் மாவட்டத் தலைவர் கே.அமரேசன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். ஐஎன்டியூசி மாநில நிர்வாகி ஆத்தூர் தாஸ் தகவல் பலகையை திறந்து வைத்தார். சோழவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எஸ். செல்வராஜ் சங்க கொடியை ஏற்றினார். தகவல் பலகையை சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.நடராஜன் திறந்துவைத்தார். இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சந்திரசேகரன், கிளைத் தலைவர் என்.சுந்தர், கிளைச் செயலாளர் ஜி.முரளி, பொருளாளர் எம்.பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.