tamilnadu

img

கிராம மக்களின் இலவச குடிநீருக்கு ஆபத்து...

தஞ்சாவூர்:
கிராம மக்களின் இலவச குடிநீருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சைமாவட்ட பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. தஞ்சையில் நடந்த வி.தொ.சபேரவையில் மாநிலச் செயலாளர் என்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி இருவரும் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:

கிராமங்களில் தற்போது வரை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்கள் உள் ளாட்சி நிர்வாக அனுமதி பெற்று வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற்று கொள்ளலாம்.தற்போது மத்திய அரசின் ஜல்சக்திதுறை மூலம் அனைத்து வீடுகளுக்கும்குடிநீர் இணைப்பு வர போவதாக அறிவிப்பு வந்தது. இலவசம் என நினைத்தோம். ஆனால் மாவட்ட நிர்வாகத்தின்அறிவிப்பில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தரப்படும். ஒவ் வொரு இணைப்பிற்கும் கட்டாயம் ரூபாய் 3000 பணம் செலுத்த வேண்டும்என்றும் அதிகாரிகள் வாய்மொழியாக மாதம் ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இனிகிராமங்களில் உள்ள பொது குடிநீர் குழாய்கள் கட்டாயம் அகற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. எதிர்காலத்தில்ஒவ்வொரு குடிநீர் இணைப்பிலும் மீட் டர் பொருத்த ஏற்பாடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எவ்வளவு நீர் பயன் படுத்துகிறோமோ அவ்வளவு தொகைமின் கட்டணம் போல் செலுத்த வேண்டும். பொது குழாய் இலவச குடிநீர் இனி இருக்காது.தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் குருவிகரம்பை, மணக்காடு, சேது பாவாசத்திரம், கொள்ளுகாடு, செந்தழை வட்டம் கங்காதரபுரம், உச்சிபுலிகாடு, பல்லத் திடல், பூவானம், உட்கரம்பை ஆகிய 10 ஊராட்சிகளில் ஜல்சக்தி பணிகள் துவக்கப்பட்டுள்ளன.விவசாய தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் கடுமையாக பாதிக்கப் படுவார்கள். எனவே பழைய நடைமுறைப் படி கிராம உள்ளாட்சிகள் மூலம் இலவச குடிநீர் வழங்கும் திட்டம் தொடர வேண்டும். காசு கொடுத்து குடிநீர் வழங்கும் திட் டத்தை எதிர்த்து வி.தொ.ச சார்பில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தி தடுப்போம் என்று அவர்கள் கூறினர்.