சென்னை:
விவசாய மின் இணைப்பு விண்ணப் பம் பதிவு செய்வதிலும் மின் இணைப்பு பெறுவதிலும் அதனை உபயோகப்படுத்துவதிலும் மற்றும் இடமாற்றம் செய்வதிலும் இதுவரை நிலவி வந்த நடைமுறைச் சிக்கல்கள் அகற்றப்பட்டுள்ளன.இனி, தாமதமின்றி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தங்கள் வெளியிட்டு, கீழ்க்கண்ட எளிமையான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.விண்ணப்பங்கள் மற்றும் தயார் நிலைக்கான விதிமுறைகளை எளிமைப்படுத்துதல், மாநிலத்திற்குள் விவசாய மின்னிணைப்பை இட மாற்றம் செய்தல், முறைமாற்ற திறப்பான் உபயோகிப்பதற்கான அனுமதி வழங்குதல் உள்ளிட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.