tamilnadu

img

சாதி ஆணவப் படுகொலை மென்பொறியாளர் கவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு அமைச்சர் கே.என்.நேரு,ஆட்சியர் நேரில் அஞ்சலி

சாதி ஆணவப் படுகொலை மென்பொறியாளர் கவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு அமைச்சர் கே.என்.நேரு,ஆட்சியர் நேரில் அஞ்சலி

திருநெல்வேலி, ஆக.1- நெல்லையில் சாதி ஆணவப் படு கொலை செய்யப்பட்ட மென்பொறி யாளர் கவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  நெல்லை அரசு மருத்துவ மனையில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர் ஆகியோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி, ஆசிரியை. இவர்களது மகன் கவின் செல்வ கணேஷ்(வயது 27). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் சென்னையில்  உள்ள ஐ.டி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 27 ஆம் தேதி பாளை யங்கோட்டை கே.டி.சி.நகரில் சுஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தனது சகோதரியை காதலித்ததால் வெட்டிக்கொன்றதாக சுஜித் கூறினார். இவர்களது பெற் றோர் காவல்துறை உதவி ஆய்வா ளர்கள்  தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரி ஆகியோர் ஆவர்.  இந்த கொலைச் சம்பவத்திற்கு  தூண்டுதலாக இருந்த சுஜித்தின் பெற்றோரை கைது செய்யும் வரை கவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என  உறவினர்கள் தெரி வித்தனர். 2 நாட்களுக்கு முன்பு சுஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வா ளர் சரவணன் கைது செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி  வசம் ஒப்படைக்கப்பட்டு,விசாரணை தொடங்கியது.  இந்நிலையில் ஆகஸ்ட் 1 வெள்ளிக்கிழமை அன்று கவின் உடலை பெற்றுக்கொள்ள உற வினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி கவினின் தந்தை சந்திரசேகர், சகோதரர் பிரவீன், தாய்மாமா இசக்கிமுத்து மற்றும் உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு வந்தனர். அவர்களிடம் கவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை அரசு மருத்துவ மனையில் கவின் உடலுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு பாளையங்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பி னர் ராஜா,  மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து  அஞ்சலி செலுத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி அஞ்சலி சொந்த ஊரான ஆறுமுக மங்கலத்திற்கு கொண்டுவரப்பட்ட கவினின் உடலுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமு வேல்ராஜ், மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டச் செயலாளர் காசி, மாவட்ட இணைச்செயலாளர் சண்முகராஜ், ஆழ்வார் திரு நகரி ஒன்றியச்செயலாளர் ரவிச்சந்தி ரன், திருவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் நம்பிராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.