திருப்பூர், நவ. 5- திருப்பூர் மாவட்டத்தில் பொருளாதாரக் கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் செல்போன் செயலி மூலம் தொடங்கி வைத்தார். இப்பணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, பொருளா தார கணக்கெடுப்பு என்ற பெயரில் நாட்டில் விவசாய பணிகள் அல்லாத தொழில் செய்பவர்கள் பற்றிய விவரங்களை சேகரிப் பதற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. இப்பணிக்காக மாவட்டம் முழுவ தும் கணக்கெடுப்பாளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு தனி கடவு எண் கொடுக்கப்பட்டிருக்கும். இவர்கள் வீடு, கடைகள், நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களுக்கும் சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்வார்கள். இவர்களிடம் குடும்பத்தில் உள்ளவர் பெயர், வயது, சமூகப் பிரிவு, பாலினம், தொழில், தொழிலில் ஈடுபட்டுள்ளவர்க ளின் எண்ணிக்கை, பெறப்பட்ட கடன் தொகை, மூலதனம், அந்த ஆண்டுக்குரிய உற்பத்தி விவரம், வருமான வரி அட்டை எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை அளிக்க வேண்டும். இத்தக வல்கள் செல்போன் செயலி மூலம் பதிவு செய்து உடனேயே ஆன்லைனில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் கணக்கெடுப்பவர் ஒதுக்கப்பட்ட முகவரிக்குச் செல்லாமல் விவரங்களை சேகரிக்க முடியாது. குறிப்பிட்ட பகுதிக்கு சென்றால்தான் அந்த பகுதியில் வசிப்பவர் கள் பற்றிய விவரங்கள் அவரது செல்போன் செயலிக்கு வரும் வகையில் ஜி.பி.எஸ்.உடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே வீடு தேடிவரும் கணக்கெடுப்பாளர்களிடம் சரியான தகவல்களை அளிப்பதன் மூலம் அரசிற்கு திட்டமிடல் பணிகளுக்கு உதவுவ துடன், அரசு உதவிகளை எதிர்காலத்தில் பெறுவதற்கும் இது ஒரு நல் வாய்ப்பாக இருக்கும். இந்த கணக்கெடுப்பு பணி அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் முடிக்கப் படும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் ஈ.சித்ரா, தேசிய புள்ளி இயல் நிறுவன முதுநிலை புள்ளியியல் அலுவலர் ஸ்டாலின் மற்றும் கோவிந்தரா ஜன், புள்ளியியல் அலுவலர் ந.அழகர்சாமி, பொதுசேவை மைய மேலாளர் செந்தில் குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அர விந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.