districts

img

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணி துவக்கம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 6- திருச்சி பஞ்சப்பூரில் ரூ.350 கோடி  மதிப்பில் அமைக்கப்படும் ஒருங்கி ணைந்த பேருந்து முனையத்தில் முதற்  கட்டமாக ரூ 20.10 கோடி மதிப்பிலான  கிராவல் மண் நிரப்பும் பணியினை நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு புதனன்று தொடங்கி வைத்தார். பின்னர் பணிகளை சிறப்பாக மேற்  கொள்ள அலுவலர்களுக்கு ஆலோ சனை வழங்கினார். இதனை தொடர்ந்து  திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் சேவை பயன்பாட்டிற்கான பேட்  டரி வாகனங்கள், 3 சிறியவகை ஜேசிபி வாகனங்கள், புதைவடிகால் ஆள் நுழைதொட்டிகளில் சேகரமாகும் மண்  துகள்களை அகற்றுவதற்கான 8 இலகு ரக வாகனங்களை மக்கள் சேவை பயன்  பாட்டிற்காக அமைச்சர் கே.என்.நேரு  தொடங்கி வைத்து வாகன ஓட்டுநர்களி டம் வாகனத்திற்கான சாவியை வழங்கி னார்.  பின்னர் திருச்சி மாநகராட்சி கட்டுப்  பாட்டு அறையில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறுகையில், திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்  டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் ரூ.350 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்.  30 ஏக்கர் பரப்பளவில் டெர்மினல் மற்றும்  பேருந்து நிலைய பணிகள் நடைபெற உள்ளது. ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேர் இந்த பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வசதி செய்யப்படும்.

தெற்கு டெர்மினல் பகுதியில் மொத்த லோடு வாகனங்களும் நிற்கும். மேலும் 28 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் மற்றும் சில்லரை மார்க்கெட் அமைய இருக்கி றது. சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்ய மேம்பாலம்  அமைக்கப்படும். தற்போது பஞ்சப்பூர்  பைப்பாஸ் சாலைக்கு தேவையான  நிலங்களை நெடுஞ்சாலைத்துறை யினர் கையகப்படுத்தி விட்டனர். ஆகவே அந்த பணிகளும் நடைபெற உள்ளது. மாநகராட்சிக்கு வருவாய் பெருக்கும் வகையில் பெரிய மால் ஒன்றும், அதன் பின்னால் வர்த்தக மையம் ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது. திருச்சி மாநகராட்சியை பொருத்தமட்டில் பாதாள சாக்கடை பணிகள் சற்று தாமதமாக நடக்கிறது. பணிகளை விரைவுப்படுத்த அறி வுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் திருச்சி மாநகரில் 75 சத வீத சாலைகள் போடப்படும். 7 பெரிய சாலைகள், 7 அல்லது 8 நாட்களில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார், மாநகர மேயர் அன்பழ கன், மாநகராட்சி ஆணையர் வைத்திய நாதன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.