அவிநாசி ஜூன் 5 - தொழிலாளர் நலச்சட்டத்தில் திருத் தம் செய்யாதே என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தி னர் தேசிய எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர் நலச் சட்டத் தில் திருத்தம் செய்யக் கூடாது. தொழி லாளர் வேலை நேரத்தை 12 மணி நேரம் உயர்த்தக் கூடாது. ராணுவத் தளவா டங்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. அரசு துறையினர் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும். ஊழியர் கள் ஓய்வு பெறும் வயதை மாற்றம் செய்ததைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் தேசிய எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டத்தை வியாழனன்று தமிழகம் முழுவதும் நடத்த அறைகூவல் விடுத்தனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் ஊழியர் சங்க நிர்வாகிகள் கருப்பன், மீனாகுமாரி, சுமதி, ராமன், பரிமளா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தேசிய எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன் தலைமை வகித்தார். மேலும் மாநில துணைத்தலைவர் ஜி. பழனியம்மாள், மாவட்டச் செயலாளர் ஏ. சேகர், மாவட்ட பொருளாளர் கே. புகழேந்தி மாவட்ட துணைத்தலைவர் பி.எஸ். இளவேணில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சி. காவேரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.