உடுமலை, செப். 7- சாலை பராமரிப்பு பணியை தனியா ருக்கு வழங்கக்கூடாது என நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உடுமலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் சனியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை பராமரிப்புப் பணியை தனியா ருக்கு வழங்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும். பணிநீக்க காலத்தில் உயிர் நீத்த சாலைபணியாளர் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும். சாலைப்பணியாளர் வாழ் வாதார கோரிக்கைகளை நிறைவேற் றக்்கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்திஏந்தி முழக்கப் போராட்டம் உடுமலைப்பேட்டை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு உட் கோட்ட தலைவர் கே.செல்லமுத்து தலைமை வகித்தார். உட்கோட்ட செய லாளர் எம்.தண்டபாணி கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் டீ.வைரமுத்து வாழ்த்து ரையாற்றினார். இறுதியாக மாநிலத் தலை வர் எம்.பாலசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். உட்கோட்ட நிர்வாகிகள் கோட்ட நிர்வாகிகள் மற்றும் சாலைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.