திருப்பூர், பிப். 17 – தமிழகத்தில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூ தியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்கக் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி திருப்பூர் மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பாக திங்களன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு மற்றும் அங் கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட இணை செயலாளர் எஸ்.புஷ்பம் தலைமை வகித் தார். மாவட்டப் பொருளாளர் எஸ்.சுசீலா, சத்துணவு ஊழியர் சங்க மாநகராட்சித் தலைவர் பி.மகேந்திரபூபதி, சங்க மாநிலத் துணைத் தலைவர் பாக்கியம், மாவட்டத் தலைவர் கே.முத்தமிழ்ராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். இதில் அகவிலைப்படி, மருத்துவப்படி, குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரியும், ஓய்வு நாளன்று பணிக்கால பணப்பலன் களை முழுமையாக வழங்க வலியுறுத்தியும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். நிறைவாக வட்டக்கிளைத் தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார். அதேபோல் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும் திங்க ளன்று இதே கோரிக்கைகளுக்காக மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அவிநாசி
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளைத் தலைவர் ஆர்.கே.சரவணன் தலைமை வகித்தார். சாலைப் பணியாளர் கள் சங்க அவிநாசி ராமன், திருப்பூர் சத்து ணவு ஓய்வூதியர் சங்கத் தலைவர் அங்கப் பன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். பொருளாளர் பி.கே.குமாரசாமி, கோபால கிருஷ்ணன், சுசீலா, பிச்சமுத்து, விஜயலட் சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தாராபுரம்
தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்றிய தலைவர் வித்தியாலட்சுமி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கை களை விளக்கி ஒன்றிய செயலாளர் சிவ சங்கரலிங்கம் பேசினார். தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பி.ரீட்டா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஆண்ட்ருஸ் லிவிங்ஸ்டன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி, சத் துணவு ஊழியர் மற்றும் அங்கன்வாடி ஓய்வூ தியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கே.பால்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசி னார்கள். ஆர்ப்பாட்டத்தில் ராமசாமி, கந்த சாமி,விஜயகுமார், செல்வமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தாராபுரம் பொதுப்பணியாளர் சங்கத்தில் நிலுவையில் உள்ள கூடுதல் தொகை பிடித்தம் செய்த ரு.92 ஆயிரத்தை 13 ஊழியர்களுக்கு ஆணையாளர் உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட் டது. முடிவில் ஒன்றிய இணை செயலாளர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார்.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றிய தலைவர் பி.கண்ணம்மாள் தலைமை வகித்தார். மாநில துணை தலை வர் எம்.கருணாநிதி, பி.சண்முகசுந்தரம், மாவட்ட இணை செயலாளர் கே.தங்கமணி, மாவட்ட துணை தலைவர் வி.மின்னல் கொடி, முன்னாள் செயலாளர் வி.உமாபதி ஈஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அரசு ஊழியர் சங்க கோட்டப் பொறியாளர் எஸ்.முருகசாமி, தலைவர் முகமது இசாக், சத்துணவு ஊழி யர் சங்க தலைவர் எம்.ரேணுகாதேவி மற் றும் ஆர்.மோகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். செயலாளர் கே.பொன்னுத்தாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட ஆர்ப் பாட்டத்தின் நிறைவாக பொருளாளர் கம லம் நன்றி கூறினார்.