திருப்பூர், ஆக. 12 - பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் காண்டூர் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக் குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்குத் தண் ணீர் கொண்டு வரும் காண்டூர் கால் வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க பொதுப் பணித் துறை நிர் வாகம் நடவடிக்கை எடுக்குமாறு விவ சாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். தற்போது மேற்குத் தொடர்ச்சி மலை பிஏபி நீர்ப்பிடிப்புப் பகுதிக ளில் பலமான மழை பெய்து வரும் நிலையில் பிஏபி அணைகள் வேகமாக நீர் நிரம்புகின்றன. இந்த நீரினை விவசாயப் பாசனத்துக்கு திருமூர்த்தி அணைக்குக் கொண்டு வந்து சேர்ப்ப தற்கு காண்டூர் கால்வாய் முக்கிய நீர்வழித் தடமாக உள்ளது. ஆனால் ஏற்கெனவே பராமரிப்பு இல்லாத நிலையிலும், சமீபத்திய மழை கார ணமாக மண், பாறைகள் அடைத்தும் நீர்வழி மோசமாக பாதிக்கப்பட்டுள் ளன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப் பூர் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன், நிர்வாகிகள் பரமசிவம், பால தண்டபாணி உள்ளிட்டோர் மேற்படி காண்டூர் கால்வாய் உள்ளிட்ட பகுதி களை பார்வையிட்டனர். மோசமான மான நிலையில் இருக்கும் காண்டூர் கால்வாயில் போர்க்கால அடிப்படை யில் சீரமைப்புப் பணிகளை மேற் கொண்டால்தான் திருமூர்த்தி அணைக்கு நீரினை கொண்டு வந்து சேர்க்க முடியும் என்பதால் இப்ப ணியை பிஏபி பொதுப்பணித் துறை நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியு றுத்தி உள்ளனர்.