தருமபுரி, ஜூலை 21- பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாள நத்தம் கிராமத்தில் குடிநீர் வசதி, பழுதான தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட் டிப்பட்டி வட்டம், தாளநத்தம் கிரா மத்தில் 800க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளன. இந்த குடியிருப் புப் பகுதிகளில் உள்ள தெருவிளக் குகள் பழுதாகியுள்ளன. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரங்களில் இருண்டு காணப்படு கிறது. இதனால், திருட்டு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் நடை பெறுகிறன. மேலும், இக்கிராமத்தில் ஊராட்சி மூலம் வழங்கப்படும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. ஒகே னக்கல் குடிநீர் வருவதில்லை. இதனால் இங்குள்ள மக்கள் குடிநீர் தேடி அலையும் நிலை உள்ளது. சிலர் விலைகொடுத்து வாங்கும் சூழ் நிலை உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஊராட்சி மூலம் வழங்கப்படும் தண்ணீரையும்,ஒகேனக்கல் குடிநீர் கிடைக்கவும், தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.