உடுமலை, ஜூன் 23- உடுமலை கிளை நூலகம் இரண்டின் சார்பில் மாணவர்களுக்கு வாசிப் பின் அவசியம் குறித்தும், வாசிப்பை நேசிப்போம் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகத்தில் ஞாயிறு தோறும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சதுரங்கம், சிலம்பம் மற்றும் ஓவியப் பயிற்சிகள் வழங் கப்பட்டு வருகிறது. இவ்வார நிகழ்வாக உடுமலை மகாத்மா காந்தி உண்டு, உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் குறித்து கலந்து ரையாடல் நடைபெற்றது. இந்த கலந்து ரையாடல் நிகழ்விற்கு, நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் வி.கே. சிவக்குமார் தலைமை வகித்தார். இரண் டாம் நிலை நூலகர் வீ.கணேசன் வர வேற்றார். உண்டு, உறைவிடப் பள்ளி காப்பாளர் புருஷோத்தமன், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் பொறுப்பாளர் அருட்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (தணிக்கை) ப.மு.அகமது சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுடன் வாசிப்பின் அவசியம் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். இதில் வாசிப்பதனால் தனித்திறன் மேம் படுகிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் தினசரி மேற்கொள்ள வேண்டும். மேலும் சுகாதார விழிப்புணர்வு பற்றியும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது பற்றியும், நூலகத்தை மாணவர்கள் பயன்படுத்தி பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற உதவும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு பொது அறிவு, கவிதை, படக்கதை மற்றும் சிறுகதை நூல்கள் வழங்கப்பட்டு ஆர்வத்துடன் வாசித்தனர். இந்த வாசிப்பை நேசிப்போம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை நூலக வாசகர் வட்ட உறுப் பினர்கள் மற்றும் நூலகர்கள் மகேந்திரன், செல்வராணி, அருள்மொழி ஆகியோர் செய்திருந்தனர்.