districts

மாணவர்களுக்கான உளவியல்  ஆலோசனை, கலந்துரையாடல்  

தஞ்சாவூர், மே 5- தஞ்சாவூர், தமிழ்ப் பல் கலைக்கழகத்தில் ‘‘மாண வர் மனநலன் காப்போம்’’ எனும் மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஒருநாள் கருத்த ரங்கம் புதனன்று நடை பெற்றது.  பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேரா.வி.திரு வள்ளுவன் தலைமை வகித் தார். தஞ்சாவூர், நேசனல் பார்மா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத் தின் தலைவர் மருத்துவர் கே.முஜிபுர் ரகுமான் சிறப்பு ரையாற்றினார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி யின் உதவிப் பேராசிரியர், மனநல மருத்துவர் ஜே.பாபு பாலசிங், திருச்சி ஆத்மா மன நல மையத்தின் உளவியல் ஆலோசகர் எஸ்.அருணா  பிரவீன் உளவியல் தொடர் பான ஆலோசனைகளை வழங்கினர்.  கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனை வர் ச.கவிதா வரவேற்றார். முனைவர் பட்ட ஆய்வாளர் த.சிவக்குமார் நன்றி கூறி னார்.