tamilnadu

img

நியாயமான விலையில் கிரயம் செய்துதரக் கோரி கோயில் நிலங்களில் குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 17 – கோயில், மடம், தேவாலயம் மற் றும் வக்ஃபு போர்டு ஆகியவற் றுக்குச் சொந்தமான நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருப் போர் மற்றும் விவசாய சாகுபடி செய்வோருக்கு அந்த நிலங்களை நியாயமான விலையில் கிரயம் செய்து தர வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருப்பூர் அரிசிக் கடை வீதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவ லகம் முன்பாக செவ்வாய்க்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர் சாகு படி செய்வோர் பாதுகாப்புக் கூட்ட மைப்பின் திருப்பூர் மாவட்ட  அமைப்பாளர் எம்.ஆர்.வெங்கட் ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்போது அறநிலையத் துறைக்குச் சொந்த மான இடங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்வோருக்கு சந்தை மதிப்பின்படி வாடகை, குத்தகை தீர்மானிப்பதைக் கைவிட வேண் டும். பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்ய வேண் டும். முறையான ஆவணங்களுடன் பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் நிலத்தைக் கிரயம் செய்வ தற்கு உரிய தடையை நீக்க வேண் டும். சட்டப்படி அனுபவித்து வரு வோருக்கு மாறாக கோவில் சொத்துகளை தனியார் கைகளில் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை அமைப்பாளர்கள் ஜி.ஈஸ்வர மூர்த்தி, வை.பழனிச்சாமி, பல் லடம் கே.சுப்பிரமணியம், கண்டி யன்கோவில் கே.பாலசுப்பிரமணி யம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன், தம்பி வெங்கடா சலம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பஞ்சலிங் கம், விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.வெங்க டாசலம், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாநிலத் துணைத் தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத் திப் பேசினர். திமுக மாநகரச் செயலாளர் மு.நாகராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக் கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில், மத அமைப் புகளின் நிலங்களில் விவசாய சாகுபடி செய்வோர், குடியிருப் போர் உள்பட இருநூறுக்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர்.