கும்பகோணம், மே 18- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட தாராசுரம் பகுதியில் காமாட்சியம்மன் கோவில் இடங்களில் சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் தலைமுறை தலை முறையாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கு பகுதியாக சிறுதொகையை கோவில் நிர்வாகத் துக்கு செலுத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென அறநிலையத் துறையினர், குடியிருப்பவர்களுக்கு பல மடங்கு வாடகையை உயர்த்தி உடனே செலுத்த வேண்டும் என ஒலிபெருக்கி மூலமும், தொலைபேசியிலும் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்யக் கோரி, தாராசுரம் காமாட்சி அம்மன் திருக்கோவில் இடங்களில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தாராசுரம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க எஸ்.வீரமணி தலைமை வகித்தார். அனைத்து சமய நிலங் களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் சா.ஜீவபாரதி, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராம், மாமன்ற உறுப்பினர் ஆ.செல்வம் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். தாராசுரம் காமாட்சி திருக்கோவில் இடங்க ளில் குடியிருப்பவர்களுக்கான அநியாய வாடகை உயர்வை ரத்து செய்திட வேண்டும். குடியிருக்கும் ஏழை மக்களின் வாடகை நிலு வைத் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். காலதாமதமின்றி வாரிசு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். நிலுவைத் தொகையை கட்டச் சொல்லி மிரட்டி நிர்ப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். அரசாணை 318-ன்படி ஏழை களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர்.