திருப்பூர், பிப்.19 – திருப்பூரில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அடங் கிய குழுவினர் புதனன்று திடீர் சோதனையில் ஈடுபட் டனர். துணிக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள், மளிகைக் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கடை களில் சோதனை நடத்தினர். இதில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த கடையில் சோதனை செய்த அதிகாரிகள் 1,500 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடை உரிமையாளர் குணசேகரனிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் அரிசிக்கடை வீதியில் உள்ள ஒரு மொத்த விற் பனையாளரிடம் இருந்து வாங்கி சில்லரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மொத்த விற்பனை யாளர் குறித்து, 3ஆவது மண்டல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீதும், விற்பனை செய் வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்தனர்.