tamilnadu

img

எலச்சிபாளையம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

நாமக்கல், அக்.11- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத் திற்குட்பட்ட எலச்சி பாளையத்தில் தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து  அபராதம் விதிக்கப் பட்டது. தமிழக அரசு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒரு முறை  பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது. இந் நிலையில் வெள்ளியன்று நாமக்கல் மாவட்டம் அகரம்  பஞ்சாயத்திற்குட்பட்ட எலச்சிபாளை யத்தில் கடைவீதி முழுவதும்  வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கிராம ஊராட்சி அலுவலர் சரவணன் ஆகியோர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கடை களில் ஆய்வு செய்தனர். இதில் தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 20 கிலோ கைப்பற்றப்பட்டது.  இதைத்தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட  பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.1800 அபராதம் விதிக்கப் பட்டது. மேலும், இனிமேல் தடைசெய் யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்த  ஆய்வின்போது மண்டல துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் லீலாவதி,  அகரம் பஞ்சாயத்து செயலாளர் பொன்னு வேல் ஆகியோர் உடனிருந்தனர். இதே போல், எலச்சிபாளையத்தில் தடைசெய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆய்வு செய்தார்.