தஞ்சாவூர், நவ.12- தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி கடைவீதியில் தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வரப்பெற்றது. இதையடுத்து ஆட் சியர் ஆ.அண்ணாதுரை உத்தர வின் பேரிலும், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ப.குற்றா லிங்கம் அறிவுறுத்தலின்படியும், பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணிமொழியன், தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் மேற் பார்வையில், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.தமிழ்வாணன் தலைமையிலான குழுவினர், செவ்வாய்க்கிழமை கடைவீதி யில் திடீர் ஆய்வு செய்தனர். இதில், அரசால் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி, உணவுப் பொட்ட லங்களை கட்டிய உணவகங் கள், பேக்கரி, தேநீர், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டி ருந்த சுமார் 50 கிலோ எடை யுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.