tamilnadu

அவிநாசியில் 90 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருப்பூர், மார்ச் 4- அவிநாசி அருகே பெருமாநல்லூர் ஊராட்சி பகுதி யில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோதனை செய்து90 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமு தல் செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பெருமா நல்லூரில் நான்கு சாலை, திருப்பூர் சாலை, கடைவீதி, உத்தமலிங்கேசுவரர் கோவில் தெரு உள்ளிட்ட பகு திகளில் உள்ள தள்ளுவண்டி, உணவு விடுதிகள் மற் றும் வணிக நிறுவனங்களில் திருப்பூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்துமதி தலை மையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோத னையில் பெருமாநல்லூர் ஊராட்சி தலைவர் சாந்தா மணி, துணைத் தலைவர் வேலுச்சாமி, ஊராட்சி செய லர் மகேஷ், ஊராட்சி பணியாளர்கள்   உள்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் உள்பட 90 கிலோ பிளாஸ்டிக் பொருட் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைக ளுக்கு ரூ.50,200 அபராதம் விதிக்கப்பட்டது.