ஆம்பூர், மே 31- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தை பகுதியில் மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் அருகே உள்ள காவக்கார பகுதியில் வசிப்பவர் இளவரசி. இவரது மகன் ஹரிஷ் (7). இந்நிலையில் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணிக்காக சனிக்கிழமையன்று பள்ளம் தோண்டப்பட்டது. அன்றைய தினம் பெய்த மழையில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஹரிஷ் அந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளான். உடனடியாக அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.