tamilnadu

img

குற்றாலத்தில் குறைந்தது தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

திருநெல்வேலி, ஏப்.27-பிரசித்தி பெற்ற குற்றாலஅருவிகளில் தண்ணீர் குறைந்து நூல் போல் நீர் விழுகிறது இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தமிழகத்தில் மிகசிறந்த சுற்றுலா தலமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அரவுி விளங்கி வருகிறது. இங்கு ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் சீசன் காலமாகும். இதனால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வெளிநாடுகள் மற்றுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் கடந்த மாதம் முதல் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் போதிய மழை இல்லாததாலும் கடும் வெயில் அடித்து வருவதால் அருவிகளில் விழுந்து வந்த தண்ணீர் படிப்படியாக குறைந்து வறண்டு கிடந்தது. சமீபத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் தண்ணீர் பழையபடி ஆர்ப்பரித்து விழுந்தது. ஆனால்மீண்டும் மழை குறைந்துவெயிலடிக்க தொடங்கியதால் தண்ணீர் வரத்து குறைந்து நூல் போல் தண்ணீர் விழுகிறது. சுற்றுலாபயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது. அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.