tamilnadu

img

81 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏமாற்றம் போதிய மீன்களும், விலையும் கிடைக்கவில்லை

தஞ்சாவூர், ஜூன் 14- கொரோனா ஊரடங்கு, மீன்பிடித் தடைக்காலம் ஆகியவற்றால் 81 நாட் கள் கழித்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தஞ்சை மாவட்ட மீனவர்கள், போதிய அளவு மீன்கள் கிடைக்காததா லும், உரிய விலை கிடைக்காததாலும் கவலை அடைந்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில், திரு வாரூர் -தஞ்சை மாவட்ட எல்லையான தம்பிக்கோட்டை வடகாடு தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டம் கட்டு மாவடி வரை 73 மீனவக் கிராமங்கள் உள்ளன. இங்கு 500 க்கும் மேற்பட்ட விடைப்படகுகளும், ஆயிரக்கணக் கான நாட்டுப் படகுகளும் உள்ளன.  இந்நிலையில் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவா சத்திரம் ஆகிய மீன்பிடித் துறைமுகத் தில் இருந்து 130 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 500 க்கும் மேற் பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கட லுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீன் பிடித் தடைக்காலம் முடிந்து செல்வ தால், கடலில் மீன் வளம் அதிகரிக்கும். கூடுதலாக மீன், நண்டு, இறால் கிடைக் கும் என, மீனவர்கள் பெரும் எதிர் பார்ப்புடன் இருந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கட லுக்குச் சென்ற படகுகள் மீன்பிடித்து திரும்பின. இதில் போதிய அளவு மீன்கள் பிடிபடாமலும், பிடித்து வந்த மீன், இறால், நண்டுகளுக்கு உரிய விலை கிடைக்காததாலும் மீனவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.  இதுகுறித்து சேதுபாவாசத்திரம் மீனவர் பெரியசாமி கூறியதாவது, “சாதாரணமாக விசைப்படகுகளுக்கு டீசலுக்கு ரூ 20 ஆயிரம் செலவாகும். கடலுக்குள் பலத்த காற்று வீசுவதா லும், சனிக்கிழமை அதிகாலை கட லுக்கு செல்லாமல், காலதாமதாக சென்றதாலும், போதிய அளவு மீன் கள் கிடைக்கவில்லை. சம்பள ஆள் செலவு, ஏனைய செலவுகள் என 5 ஆயிரம் ஆனது. மீன், இறால், நண்டு என கடலில் பிடிபட்டவை ரூ.15 ஆயி ரத்துக்கே விற்பனை ஆனது. எனவே மீனவர்களுக்கு சராசரி 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை நட்டம் ஏற் பட்டுள்ளது” என்றார்.  கடல் உணவுப் பொருட்கள் ஏற்று மதியாளர்கள், வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் வராததால், இறால் விலை ரூ 250 முதல் 300 வரை யும், நண்டு விலை ரூ 150 முதல் 200 வரையும் விற்பனை ஆனது.

மீன் களுக்கும் ஏலத்தில் போதிய விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோ னாவுக்கு முன்னர் இறால் ரூ 450 முதல் 600 வரையும், நண்டு ரூ 350 முதல் 400 வரையும் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.  மீன் ஏற்றுமதியாளர்கள் வராத தால் கடல் உணவுப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது. இதனால், மீனவர்கள் நட் டத்தை சந்தித்து வருகின்றனர். கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய குளிர் பதனக் கிடங்கு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்துத் தர வேண் டும் என அரசுக்கு, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் ஏ.தாஜுதீன் கோரிக்கை விடுத்துள் ளார்.