tamilnadu

புனித அந்தோணியார் திருத்தல திருவிழா

 

திருநெல்வேலி, ஜன.16- சுரண்டை புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கடந்த 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற் றத்துடன் தொடங்கியது.  நவ நாட்களில் மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலி யும், மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடைபெறும். 25 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி யும், 26 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலியும், மாலை 6 மணிக்கு புனி தரின் திரு உருவ தேர் பவனியும் நடை பெறும். 27 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு நன்றி திருப்பலி மற்றும் கொடி இறக்கத்துடன் திரு விழா நிறைவடையும் என பங்கு தந்தை அருட்பணி லாரன்ஸ் தெரி வித்தார்.