திருநெல்வேலி, ஜூன் 15- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது. இதுகுறித்து கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் அடுத்த ஆறு மாத கால த்திற்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்கமாக அளித்திட வேண்டும். மகா த்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச்சட்டத்தின் கீழ் 200 நாட்க ளுக்கு வேலை அளித்திட வேண்டும். ஊதி யத்தொகையையும் உயர்த்திட வேண்டும். நகர்ப்புற ஏழைகளுக்கும் இதனை விரிவாக்கிட வேண்டும். வேலையில்லா தோருக்கு வேலையில்லா கால நிவாரணம் உடனடியாக அறிவித்திட வேண்டும். நாட்டின் சொத்துக்களை சூறையா டுவதை நிறுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதையும், தொழிலாளர் நலச்சட்டங்க ளைத் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றுவதையும் நிறுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 185 இடங்களில் தனிமனித இடைவெளியோடு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.