tamilnadu

நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்தவர் கைது

திருநெல்வேலி, ஏப்.21-புளியரை அருகே 2 நாட்டுத் துப்பாக்கிகளுடன் பதுங்கியிருந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், புளியரை அருகே சுடுகாட்டுப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஒரு இளைஞர் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினர் அங்கு சென்று அந்தஇளைஞரை தேடினர்.அப்போது, அந்த இளைஞர் தப்பி ஓடியுள்ளார். அவரை பிடித்து நடத்திய விசாரணையில், 2 நாட்டுத் துப்பாக்கிகளுடன் நின்றுகொண்டிருந்த அந்தஇளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் லெனின் (36) என்பதும், இவர் மீது குற்றாலம், செங் கோட்டை, புளியரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துதொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.