திருநெல்வேலி, ஏப். 1-
நெல்லையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயில் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக வெயில் 102.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதனால் மதிய வேளைகளில் மாநகரத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் கூட்டமின்றி காணப்பட்டன. சாலைகளில் ஆங்காங்கே கானல் நீர்தென்பட்டது.