சென்னை
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். அவசிய தேவையை தவிர்த்து மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் சென்னையில் உள்ள 3,800 ஏ.டி.எம்-களை அவ்வப்போது தூய்மைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சென்னையில் உள்ள பூங்காக்கள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.