தூத்துக்குடி, பிப்.27- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. சமீபக் கால மாக அனல் மின் நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. 5வது யூனிட் கடந்த 3 மாதமாக இயங்கவில்லை. இந் நிலையில் 1, 3, 4வது யூனிட்களில் புதனன்று திடீரெனப் பழுது ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பழுது நீக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து 4வது யூனிட் டில் பழுது வியாழனன்று காலை சரி செய் யப்பட்டது. மற்ற யூனிட்டுகளில் பழுது நீக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது. தூத்துக்குடி அனல் மின் நிலை யத்தில் 3யூனிட்டுகள் இயங்காததால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. தற்போது 2, மற்றும் 4 வது யூனி்ட்டுகள் மட்டுமே இயங்குவதால் 420 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி யாகிறது.