tamilnadu

img

இ-பாஸ் முறையை கைவிடக் கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஆக.23- மத்திய அரசின் மக்கள், தொழிலாளர் விரோத கொள்கை களை கண்டித்தும், தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை கை விட வேண்டும். பொதுப் போக்கு வரத்தை கட்டுப்பாட்டுடன் உடனே துவக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி புறநகரில் கிளை செயலாளர் ச. வீரபெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் இரா.பேச்சிமுத்து, புறநகர் செயலாளர் பா.ராஜா, புறநகர் குழு உறுப்பினர் முருகன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.