தூத்துக்குடி, பிப்.27- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆசிர்வாதபுரம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச மருத்துவ முகாமைத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மிக வும் முக்கியமான ஒன்று. தமிழ் நாகரீ கத்தைப் பற்றிய மிக முக்கியமான கண்டு பிடிப்புகள், ஆதிச்சநல்லூரில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அதற்குத் தரப்பட வேண்டிய முக்கியத்துவம் தற் போது வரை தரப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் இங்கு நடந்த அகழ்வாய்வின் அறிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை. இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். மேலும் பல முறை கோரிக்கை வைத்தேன். சென்ற டிசம்பர் மாதம் அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை வெளியிடப்படவில்லை. எனவே ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ் வாய்வின் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும். மேலும் மத்திய அரசு ஆதிச்ச நல்லூர் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மாநில அரசு சார்பில் ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வு பணிகள் துவங்கும் என்று கூறியிருந்தனர். ஆனால் அதற்கான எந்த விதப் பணிகளும் தற்போது வரை துவங்க வில்லை. எனவே உடனடியாக அதற்கான நடவ டிக்கையை எடுக்க வேண்டும் என்றார். அப்போது திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பி னர் அனிதா ராதா கிருஷ்ணன் உடனிருந்தார்.