திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத் தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத் தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் குறைந்த அளவே தண் ணீர் கிடைப்பதால் பம்ப்செட் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகின்றனர். நெல்,எள், நிலக் கடலை, காய்கனி, மலர்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டு உள்ளனர். சிலர் கரும்பு ,பருத்தி, முருங்கை, வாழை உள்ளிட்டவை பயிரிட்டு உள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக் காய் அதிகமாக விளைவதால் அவை கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப் படுகிறது. அவைகளை ஓட்டல் நடத்துபவர்கள் அதிகமாக வாங்கி செல்கின்றனர். பொதுமக்களும் குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.காய்கறி விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் தக்காளி, கத்தரிக்காய், கேந்தி பூ போன்றவற்றின் விற் பனையால் வரும் வருமானத்தை விட, அறுவடை செய்யும் கூலி செலவு அதிகமாகும் என்பதால் அவைகளைப் பறிக்காமல் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் காய் கனி விலை வீழ்ச்சியால் கவலைஅடைந்துள்ளனர். விற்பனையாகாமல் தேங்கியுள்ள தக்காளிகளை சாலையோரம் கொட்டிவிட்டுச் செல்லும் அவலம் தொடர்கிறது.இது குறித்து, திருவண்ணாமலை வட்டார பகுதி விவசாயிகள் கூறும் போது, “ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்து முடங்கிப் போய் உள்ளது. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல தடை இல்லை என்றாலும், அதிக வாடகைக்குச் சரக்கு வாகனங்களை அமர்த்தி காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை” என்றனர்.
ஊரடங்குக்கு முன்பு கத்திரி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய் கறிகள் சராசரியாக ஒரு கிலோ ரூ.50 வரை விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனையாகிறது. இதனால், கிராமப் பகுதிகளில், விலை வீழ்ச்சியால் விளைந்த காய்கனிகளை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுவிட்டோம் என்றும் வேதனையை வெளிப்படுத்தினார். சிலர் அறுவடை செய்து வீணாகக் குப்பையில் கொட்டி வருகின்றனர்.இந்த நிலையால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
===ஜெ.செந்தாமரை கண்ணன்====