tamilnadu

img

திருவள்ளுவர் சிலை மீண்டும் அவமதிப்பு அர்ஜூன் சம்பத் அட்டூழியம்

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த அர்ஜூன் சம்பத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் கணேசன், வடக்கு மாநகர செயலாளர் ஆர்.வி. கதிர்வேல், கிழக்கு மாநகர தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர், நவ.6- தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு   காவித்துண்டு, ருத்ராட்ச மாலை  அணிவித்து அவமதிப்பு செய்து, பொது அமைதிக்கு பங்கம் விளை விக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை கடந்த 3-ஆம் தேதி நள்ளிரவு மர்மநபர்களால் அவ மதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் புதன்கிழமை தஞ்சா வூருக்கு வந்த அர்ஜூன் சம்பத் ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளூவர் சிலையை பார்க்கச் சென்றார். அப்போது திருவள்ளுவர் சிலைக்கு அர்ஜூன் சம்பத்,  காவித் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலை அணி வித்து, திருக்குறளின் முதல் குறளை கடவுள் வாழ்த்தாக பாடலை பாடி, கற்பூர தீபாராதனை காட்டி, விபூதி பூசி வழிபாடு நடத்தி, பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அராஜகமாக நடந்துகொண்டுள்ளார். இதனை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர்.

குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம் கூறுகையில், உள்ளூர்க் காரர்கள் எவரையும் திருவள்ளு வர் சிலைக்கு அருகே போலீசார் அனுமதிப்பதில்லை. இப்படியிருக்கை யில் அர்ஜூன் சம்பத்தை போலீசார் எப்படி அனுமதித்தார்கள்? பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ள அர்ஜூன் சம்பத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவர் மீது தமிழக அரசு உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். 

புகார்

அர்ஜூன் சம்பத்தின் அவமதிப்பு தொடர்பாக சசிக்குமார் என்பவர் தஞ்சை தமிழ் பல்கலைகழகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் அர்ஜூன் சம்பத் செயல்பட்டதாக அவரது புகார் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜசோழனின் சதயவிழாவையொட்டி, அவரது சமாதிக்கு மாலை அணிவித்துவிட்டு வந்த அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்  செயலாளர் டி.குருமூர்த்தி, தஞ்சா வூர் மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திக்ராவ் ஆகிய 3 பேரை  வல்லம் காவல்துறை துணைக் கண் காணிப்பாளர் சீத்தாராமன் தலைமை யிலான காவல்துறையினர் கைது செய்தனர். காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 போலீசார் சஸ்பெண்ட்

இதனிடையே, திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு போர்த்தி ருத்ராட்சை அணிவித்து அர்ஜூன் சம்பத் வழிபாடு நடத்தியதைத் தடுக்கா மல் வேடிக்கை பார்த்ததாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நான்கு காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பணி யிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித் துள்ளார். திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்த காவலர் களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.